கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Author: Rajesh
23 March 2022, 7:30 pm

கோவை: கோவையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை கணபதி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு வேனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சோதனை செய்த போது அதில் 102 சாக்கு மூட்டைகளில் 5100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரித்த போது அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட முயன்ற காந்திமாநகர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1291

    0

    0