நீட் விலக்கு மசோதாவா… இன்னும் எங்க கைக்கு வரலயே : ஆ. ராசாவின் கேள்விக்கு கையை விரித்த மத்திய அமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2022, 7:51 pm
நீட் விலக்கு கோரிய மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று மக்களவையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெற்றதா? மேலும் தமிழக அரசின் குழு இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசை அணுகி கோரிக்கை எதும் முன்வைத்ததா? இவ்விவகரத்தில் மத்திய அரசின் பதில் என்ன? ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதாகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின் படி நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசால் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுபப்பட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை என கூறினார்.
இதில் மத்திய அரசின் கைக்கு இன்னும் மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பவில்லை என்றே தெரிகிறது.