தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள்… யூ.ஏ.இ. அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!!

Author: Babu Lakshmanan
26 March 2022, 9:36 am

சென்னை : தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

4 நாள் பயணமாக 24ம் தேதி மாலை சென்னையில் இருந்து துபாய் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று உலகக் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். முன்னதாக,துபாய் பன்னாட்டு நிதி மையத்தில், ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை, நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய அரபு நாடுகளில் செயல்பட்டு வரும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு நிலவும், சாதகமான சூழலை எடுத்துரைத்து, தொழில் தொடங்க வருமாறு ஐக்கிய அரபு நாடுகளின் இரண்டு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதோடு, முதலீட்டாளர்கள் குழுவையும் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 1196

    0

    0