ஜூனியர் மாணவரை முட்டிப் போட வைத்து கொடூரமாக தாக்கி ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் : தனியார் கல்லூரியில் கொடுமை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 1:03 pm

ஆந்திரா : மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளி பகுதியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவரை அடித்து உதைத்து ராகிங் செய்த நிலையில் 9 மாணவர்களை போலிசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெய கிரண் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடே பள்ளி தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சீனியர் மாணவர்கள் ஜெயகிரணை, அவர்களுடைய விடுதி அறைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு ஜெய கிரன் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மிரட்டி விடுதி அறைக்கு வரவழைத்து ஜெய கிரணை முட்டி போட வைத்து அடித்தும் காலால் உதைத்தும் ராகிங் செய்துள்ளனர்.

இதனால் காயமடைந்த ஜெய கிரண் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் 9 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மற்ற மாணவர்களை எச்சரித்தனர்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 1497

    0

    0