திருப்பதி ஸ்ரீவாரி அருகே டெம்போ ட்ராவலர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து : 9 பேர் படுகாயம்… போக்குவரத்து பாதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 4:26 pm

திருப்பதி : திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்லும் மலைப்பாதையில் டெம்போ ட்ராவலர் மற்றும் அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்லும் மலைப்பாதையில் டெம்போ ட்ராவலர் வாகனம் பக்தர்களுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிரே வந்த அரசு பேருந்து டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டெம்போ டிராவலர் வாகனத்தில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் இரண்டு பேர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இதனால் டெம்போ வாகனத்தில் வந்த பக்தர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்டு மற்ற பயணிகள் சிகிச்சைக்காக திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அங்கு சற்று நேரம் போக்குவரத்து முடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • audience cheering prabhu deva dance makes chiranjeevi angry பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?