கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் 15வது சீசன்: கொல்கத்தாவை எதிர்கொள்வாரா சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன்?

Author: Rajesh
26 March 2022, 7:15 pm

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவின் முக்கிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 15வது தொடரில் இந்தமுறை லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. மெகா ஏலத்துக்குப் பிறகு அனைத்து அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள், அறிமுக இளம் வீரர்கள் என பலரும் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

மும்பை, ராஜஸ்தான், டெல்லியை தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளைக் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மார்ச் 31க்கு பிறகு கொரோனா கட்டுபாடுகள் முடிவுக்கு வர உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாடுவதில் மாற்றமில்லை. முன்பு 55 லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்த முறை அது 70ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 65 நாட்களில் 70 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் நடக்க உள்ளன. எல்லா ஆட்டங்களும் மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டிஒய் பாட்டீல் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.

வான்கடே, டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தலா 20 போட்டிகள், பிராபோர்ன், எம்சிஏ ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகள் நடத்தப்படுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள், இறுதி ஆட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. லீக் சுற்று ஆட்டங்கள் மே 18ம் தேதியுடன் முடிவடைகிறது. பைனல் மே 29ல் நடைபெறும்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1782

    0

    0