‘ஹெல்மெட் அவசியம்’: கோவையில் பெண் போலீசார் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி..!!

Author: Rajesh
27 March 2022, 11:01 am

கோவை: கோவையில் பெண் போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னார்வ மகளிர் அமைப்புகளும் , கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியும் விழிப்புணர்வு பேரணி வடகோவை சிந்தாமணி சந்திப்பில் சந்திப்பில் நடைபெற்றது.

கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் எஸ். ஆர்.செந்தில்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்த பேரணி காமராஜர் ரோடு , திருவேங்கடசாமி ரோடு, R.S. புரம் , லாலி ரோடு உள்ளிட்ட வழியாக தடாகம் அரசு பொறியியல் கல்லூரியை சென்றடைந்தது.

200க்கும் மேற்பட்ட மகளிர்கள் மட்டும் கலந்து கொண்ட இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும் , இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சிற்றரசு உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் பங்கு பெற்றனர்

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?