தேசிய கீதம் பாடி அசத்திய 5 வயது சிறுமி…ராணுவம் வழங்கிய கௌரவம்: இணையத்தில் மீண்டும் வைரலாகும் மிசோரம் சிறுமி!!

Author: Rajesh
27 March 2022, 4:42 pm

மிசோரம்: இந்திய தேசிய கீதத்தை பாடி அசத்திய 5 வயது சிறுமிக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் 5 வயதான சிறுமி எஸ்தர் ஹென்மெட். தேசிய கீதத்தை உணர்ச்சி பொங்க பாடிய இந்த சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலானது.

எஸ்தர் கடந்த ஆண்டு வந்தே மாதரம் பாடலை பாடி பிரபலமடைந்தார். அதே போல், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தேசிய கீத பாடலை பாடி பிரபலமடைந்துள்ளார். இதனையடுத்து, ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி எஸ்தரை ராணுவத்தினர் கௌரவப்படுத்தினர்.

இந்த ராணுவத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ராணுவ வீரர்களின் இசை முழக்கத்துடன் தன்னுடைய மழலைக் குரலில் தேசிய கீதத்தை பாடி அசத்தினார் சிறுமி எஸ்தர். மேலும், சிறுமிக்காகவே இந்திய ராணுவத்தினர்கள் அணியும் பிரத்யேக உடை தயாரிக்கப்பட்டு சிறுமிக்கு வழங்கப்பட்டது.

2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான சிறுமியின் வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?