200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…8 பேர் பலி..40 பேர் படுகாயம்: திருப்பதியில் திருமணத்திற்கு சென்று திரும்பிய போது சோகம்..!!

Author: Rajesh
27 March 2022, 3:18 pm

திருப்பதி: பக்ரா பேட்டை மலை பாதையில் திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத.

ஆந்திர மாநிலம் தர்மாவரம் ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லி செட்டி வேணு. இவருக்கு சித்தூர் மாவட்டம் நாராயணவனம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுட நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இன்று திருச்சானூரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் வேணு குடும்பத்தினர் நேற்று மதியம் திருப்பதிக்கு தனியார் பேருந்து மூலம் புறப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பதிக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் பாக்ரா பேட்டை மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்த பயணிகள் இதுகுறித்து தீயணைப்பு துறை காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சக வாகன ஓட்டிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரம் என்பதால் பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருக்கின்றனர். 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என என்ன படுகிறது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!