துபாயில் இருந்து வந்த கையோடு அவசர அவசரமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்… பரபரப்பில் தமிழக அரசியல்..!!

Author: Babu Lakshmanan
28 March 2022, 2:45 pm

சென்னை : 4 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக டெல்லி செல்ல இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதற்கட்டமாக துபாய் சென்ற அவர், அங்குள்ள உலக கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, துபாய் அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழலை எடுத்துக் கூறி, தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

பின்னர், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசி அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.2,600 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

துபாய் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அபுதாபிக்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அபுதாபியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாளையுடன் அவரது துபாய் பயணம் முடிவடைய உள்ள நிலையில், நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு 3 நாட்கள் தங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

stalin - pm modi meet - updatenews360

அங்கு தங்கியிருந்து 31ம் தேதி பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, நீட் விலக்கு மசோதா மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை கொடுக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஏப்.,1ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 1351

    0

    0