விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. 66வது படம் குறித்து முக்கிய அப்டேட் : ராஷ்மிகா, கீர்த்திக்கு வாய்ப்பில்ல.. முதன்முறையாக இணையும் நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2022, 2:27 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் டபுள் சந்தோஷமாக அடுத்த படத்த அப்டேட் குறித்து விஜய் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இவர் தமிழில் வெளியான தோழா படத்தை இயக்கியிருந்தார்.
தெலுங்கு முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படம் மூலம் தெலுங்கு சினிமாவில் விஜய் அறிமுகமாக உள்ளார். இந்த நிலையில் படத்தில் விஜய்யுடன் ஜோடி போடப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் கீர்த்தி சுரேஷ் என கூறப்பட்டது பின்னர் ராஷ்மிகா என சொல்லப்பட்டது. ஆனால் வர்கள் இரண்டு பேருக்கும் அந்த வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் வெளியாக தகவல் படி விஜய்யுடன் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால், நடிகை கீர்த்தி நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவே. அடுத்த மாதம் விஜய் 66வது படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க உள்ளது.