மாடுகளை தாக்க வந்த ஒற்றை யானை…துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி: வனத்துறையினர் கைது செய்து விசாரணை..!!

Author: Rajesh
28 March 2022, 5:36 pm

தர்மபுரி: ஓசூர் அருகே மாடுகளை தாக்க வந்ததாக ஒற்றை காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்து கிடந்ததை ரோந்து பணிக்கு வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

அதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்த, பின் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், திம்மன் தொட்டிகிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டியில் வளர்த்து வரும் மாடுகளை பெண் காட்டு யானை தாக்க வந்ததால், துப்பாக்கியால் சுட்டதை அவர் ஒப்புகொண்டுள்ளார். மேலும், சுட்டதும் காட்டுப்பகுதிக்குள் சென்ற சிறிது நேரத்தில் யானை இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாரப்பனிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, அவரை வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1284

    0

    0