அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: உடைந்து விழுந்த கட்டில்…பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு பலத்த காயம்…கதறி அழுத தாய்..!!

Author: Rajesh
29 March 2022, 10:50 am

விருதுநகர்: அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாள் ஆன ஆண் குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமியின் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிவையில், தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு மருத்துவமனையின் கட்டில் உடைந்து குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்ததாகவும் குழந்தையின் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்காத மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் தரமற்ற கட்டில், வாகனங்கள் போன்றவை மருத்துவமனையில் இருப்பதாக பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து குழந்தை காயம் அடைந்துள்ள விவகாரம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1280

    0

    0