கல்யாண கோலத்தில் போட்டோவிற்கு போஸ் கொடுத்த கேப்ரியல்லா சிரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா…!??
Author: kavin kumar29 March 2022, 4:57 pm
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பு அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , அதில்பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.
3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.
அந்தவகையில் கேப்ரியல்லா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அவரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் பிஸியாக நடித்து வரும் கேப்ரியலா திருமணக்கோலத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் சீரியல் கல்யாணம் ஒருவழியா முடுஞ்சுருச்சு போல என்று கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.