மூதாட்டியை கீழே தள்ளி தாலிக் கொடியை பறித்து சென்ற இளைஞர்கள் : பைக் திருடும் போது போலீசாரிடம் வசமாக சிக்கினர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 4:59 pm

மயிலாடுதுறை : மூதாட்டியிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற மர்மநபர்கள் வேறொரு குற்றவழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை சேந்தங்குடி வள்ளலார் கோயில் ஒத்த தெருவைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி கௌரி (வயது 57). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வள்ளலார் கோயில் அருகில் உள்ள பூக்கடையில் பூ மாலை வாங்கிக்கொண்டு இரட்டைத்தெருவில் சாலையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பட்ட பகலில் எதிரே சென்று பறித்துள்ளார்.

அவர் செயினை காப்பாற்றிக்கொள்ள போராடிய நிலையில் தாலி செயினை அறுத்து மூதாட்டியை கீழே தள்ளி விட்டு மர்ம நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்துள்ளனர். இதனை அடுத்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிக ளகொண்டு ஆய்வு செய்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இதையடுத்து தனிப்படைகளை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், வாகனத்தை திருடிய வழக்கில் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகே 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ஆண்டிமடத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் மணிகண்டன் என்பதும், அவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் வள்ளலார் கோவில் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் 5 சவரன் தாலியை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!