உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!!
Author: Rajesh30 March 2022, 9:16 am
தஞ்சை: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட பட்டுத் துணிகள் கொண்டு கொடிமரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல், இந்த ஆண்டு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.