விஜய் மீது சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிருப்தியா.? என்னதான் பிரச்சனை..?
Author: Rajesh30 March 2022, 12:53 pm
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தான் விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனிடையே நேற்று அந்த படத்தின் இயக்குனர் பீஸ்ட் அப்டேட் வரப்போகிறது என்ற ஒரு ட்டுவிட்டை போட்டுயிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது வரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் எந்த ஒரு பதிவும் போடவில்லை. இதனால் பீஸ்ட் பட வெளியாவதில் பிரச்சனை இருக்கிறதா என கேள்வி எழுந்துள்ளது.
பீஸ்ட் படத்தின் படத்தின் கடைசி அவுட்புட் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு திருப்தி இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் கேஜிஎப் 2 படம் வெளியாவதால் பீஸ்ட் ரிலீஸ் தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கலாம் என சன் பிக்சர்ஸ் கேட்டபோது விஜய் ‘தேதியை மாற்ற வேண்டாம்’ என கூறிவிட்டாராம். இதனால் தான் சன் பிக்சர்ஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சரியாக போகாததால் சன் பிக்சர்ஸ் இந்த பீஸ்ட் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் வர கூடாது என நினைப்பதாக தெரிகிறது. அதனால் தான் கேஜிஎப் 2 உடன் மோதலை தவிர்க்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்துடன் வெளியாகும் ‘கேஜிஎப் 2’ திரைப்படமும் ஒரு பான் – இந்தியா திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.