வெளியே பேப்பர் லோடு..உள்ளே கஞ்சா கடத்தல்: 215 கிலோ கஞ்சா பறிமுதல்…திண்டுக்கல் போதை தடுப்பு போலீசார் அதிரடி..!!

Author: Rajesh
30 March 2022, 5:35 pm

திண்டுக்கல்: ஆந்திராவில் இருந்து பேப்பர் பண்டல் லாரியில் கடத்தி வரப்பட்ட 215 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக டிஜிபி.சைலேந்திரபாபு கஞ்சா மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆபரேஷன் 2.0-வை முன்னிட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கொண்டுவரப்பட்டு மதுரை சுற்றுப் பகுதியில் விற்பனை செய்வதற்காக பேப்பர் கொண்டு செல்லும் லாரியில் மறைத்து கொண்டு செல்வதாக எஸ்பி ரோஹித்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் படி திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப் போலீசார் டிஎஸ்பி புகழேந்தி மேற்பார்வையில் ஆய்வாளர் சத்யா தலைமையில் வேடசந்தூர் காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் பேப்பர் பண்டல்களுக்கு நடுவில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் ஆய்வாளர் சத்யா மற்றும் காவலர்கள் சங்ககிரியை சேர்ந்த அருண்குமார் (33), பர்கூரை சேர்ந்த சண்முகம்(58) ஆகிய 2 பேரை கைது செய்து 215 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்