தமிழில் வெளியாகும் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் படம் : கிளம்பிய எதிர்ப்புகள்..!

Author: Rajesh
31 March 2022, 1:00 pm

இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி தனது ட்டுவிட்டர் பக்கத்தில், அரசியல், சினிமா உள்ளிட்ட விவகாரங்களில் அவரது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதனை அவர் வாடிக்கையாகவே வைத்திருப்பதாகவும் சிலர் குற்றம்சுமத்தி வருகின்றனர். அப்படி படத்துக்குப் படம் கான்ட்ரவர்சியை கிளப்பி விட்டு, அதில் லாபம் அடைபவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா என்று சிலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் அவரது அடுத்த படமான காதல் காதல்தான் படமும் சர்ச்சைக்குரிய படமாக வெளியாகவுள்ளது. இதுவொரு லெஸ்பியன் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் என தெரிகிறது.

இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் இது என்று விளம்பரப்படுத்தியுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் நடிகைகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆண்கள் மேல் வெறுப்பு கொண்ட லெஸ்பியன்களாக இவர்கள் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, இந்தியில் இந்தப் படம் டேன்சரஸ் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இயக்குனர் ராம் கோபால் வர்மா, நைனா கங்குலி, அப்ஷரா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நைனா கங்குலி இந்தப் படத்தில் நடிக்க வைத்ததற்காக வர்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வர்மா ஆண் போல் நடிக்க வேண்டும் என்றதற்காக ஆண்களின் மேனரிசங்களை கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

லெஸ்பியன் தவறு அல்ல. அது ஹார்மோன்கள் சம்பந்தப்பட்டது. ஓரினைச் சேர்க்கையாளர்கள் பற்றிய படத்தில் நடித்தது நிறைவளிக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அப்ஷரா ராணி, வர்மாவின் தெளிவான பார்வை வியப்பளிப்பதாகவும், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். ஓரினச்சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றார்.

இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்பதை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம் என ராம் கோபால் வர்மா கூறினார்.

இந்த நிலையில் வழக்கம் போல இந்த படத்திற்கு எதிராக சிலர் தங்களது எதிர்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.இதுபோன்ற படங்களை எடுத்து நமது கலாச்சாரத்தையும் குழந்தைகளையும் அழித்துவிடாதீர்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1691

    0

    0