8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
31 March 2022, 7:16 pm

8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் அனைத்து கிராமங்களிலும் கிராம செயலகம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொதுசேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த செயலகங்கள் அந்தந்த கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி வளாகங்களிலேயே செயல்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து சிலர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளி வளாகங்களில் கிராம செயலகங்கள் செயல்படக் கூடாது என்றும், மாவட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

இதையடுத்து அதிகாரிகள் தவறுக்காக மன்னிப்பு கேட்டனர். அதிகாரிகளின் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது ஒரு வருடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ஒருமுறை பணியாற்றி சொந்த செலவில் உணவளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

  • Saif Ali Khan attacked by Knife in his house at Mumbai பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!