அடிக்கடி லிப் பாம் யூஸ் பண்ணுவீங்களா… நீங்க இத தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்!!!
Author: Hemalatha Ramkumar1 April 2022, 2:02 pm
நம்மில் சிலர் லிப் பாம் அதிகமாக உபயோகிப்பதால் உதடுகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரியாமல் தினமும் லிப் பாம் பயன்படுத்துகிறோம். ஆகவே இந்த பதிவில் அதனால் ஏற்படும் சில விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
●உங்கள் உதடுகள் இன்னும் வறண்டு போகலாம்
தோல் மருத்துவர்களின் கூற்றுப்படி, லிப் பாம்களில் நம் உதடுகளை எரிச்சலூட்டும் அல்லது அதிகமாக உரிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. அவை ஃபீனால், கற்பூரம், மெந்தோல், வாசனை திரவியங்கள், சுவையூட்டிகள், சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் E போன்றவை. எடுத்துக்காட்டாக, 33% நோயாளிகள் வைட்டமின் ஈ மூலம் தொடர்பு தோல் அழற்சியை உருவாக்கியுள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
●உங்கள் உதடுகளைச் சுற்றி எரிச்சல் ஏற்படலாம்
ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் லிப் பாம் தடவக்கூடாது என்று நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் நம்மில் பலர் எழுந்ததும், எதையாவது சாப்பிட்டதும்/குடித்ததும், தூங்குவதற்கு முன்பும் என பலமுறை அதனை பயன்படுத்துகிறோம். உங்கள் லிப் பாமை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால், உங்களுக்கு எரிச்சல் ஏற்படலாம் அல்லது உங்கள் உதடு பகுதியைச் சுற்றி சிறிய புள்ளிகள் தோன்றலாம்.
●உங்கள் உதடுகளில் உள்ள சுரப்பிகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம்
சில லிப் பாம் ஃபார்முலாக்கள் ஈரப்பதத்தைப் பூட்டுவதற்கு செயற்கையான தடையை உருவாக்குகின்றன. இதனால் உங்கள் உதடுகள் அவற்றின் நீரேற்ற அளவைப் பராமரிக்க குறைவாக வேலை செய்கின்றன.
●லிப் பாம் பயன்படுத்தும் செயலுக்கு அடிமையாக்கிவிடும்
சிலர் லிப் பாமுக்கு அடிமையாகிவிட்டதாக கூறினாலும், அது சாத்தியமில்லை என்று ஒரு சில நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் லிப் பாமுக்கு அடிமையாக இருக்க முடியாது. மாறாக, நமது லிப் பாமை பயன்படுத்துவதன் மூலம் நாம் பெறும் இனிமையான பொறிமுறைக்கு அடிமையாகி விடுகிறோம்.