இலவச மின்சாரம் வழங்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய உதவி மின்பொறியாளர் !!

Author: Babu Lakshmanan
1 April 2022, 8:26 pm

மதுரை : உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிமின்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி ஒன்றியம் உத்தப்பநாயக்கனூர் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக வேலை பார்த்து வருபவர் சக்தி என்ற சக்திவேல் (45). இவரிடம் ரெட்டியபட்டியைச் ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தோட்டத்திற்கு இலவச மின்சாரம் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இலவச மின்சாரம் வழங்குவதற்கு உதவி மின் பொறியாளர் சக்தி என்ற சக்திவேல் லஞ்சம் பணம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இடம் இது குறித்து புகார் செய்துள்ளார்.

இன்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியசீலன் இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் போலீசார் வழிகாட்டுதல்படி, சசிகுமார் உதவி மின் பொறியாளர் சக்திவேலிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 1505

    0

    0