கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ… அரியவகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்… தீயை அணைக்க வனத்துறை போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 11:10 am

திண்டுக்கல் : கொடைக்கானல் பழனி சாலை வடகவுஞ்சி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை திணறி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது வடகவுஞ்சி மலை கிராமம். இந்த பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகின.

கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரல் மழை மற்றும் திடீர் கனமழை பெய்தது. இருப்பினும் திடீரென்று வனபகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள வன விலங்குகள் வடகவுஞ்சி கிராம பகுதிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத காரணத்தினால் இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

வரும் காலங்களில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?