ஆட்டிசம் பாதித்த ஏழைக் குழந்தைகளின் பெற்றோருக்கு உதவ முன் வாருங்கள் : கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 10:53 pm

கோவை: ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் ஏழைப் பெற்றோருக்கு உதவுமாறு கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியுள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி உலக ஆட்டிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் ஆட்டிசம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கோவையில் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் சிறப்பு பள்ளிகள் மற்றும் வழக்கமான பள்ளிகளின் முதல்வர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், உளவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தங்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக மியூசிகல் கீபோர்டு, பாடல், இசை ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது : இந்த நிகழ்ச்சியை ஒரு முன்னுதாரணமான நிகழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள் மேடையை கைப்பற்றியுள்ள நிகழ்ச்சியாக இது உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் எனது பாராட்டுக்கள்.

சிறப்பு குழந்தைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலமாக அவர்களை மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதனை படிப்படியாக மாவட்ட நிர்வாகம் வழி நடத்தும். இது அரசின் திட்டமாகவே மாறும்.

முதலமைச்சரும், மருத்துவத்துறை செயலாளரும் இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். குழந்தை வளரும் போது அந்தக் குழந்தை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, பழக்கவழக்க ரீதியாகவோ ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அப்படியான குழந்தைகள் இருக்கும் பொழுது, நமது குழந்தைக்கும் திறன் உள்ளது என்ற மனப் பக்குவத்தை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு படி நிலைகளுக்கும் ஆதரவாக நமது சமூகம் இருக்க வேண்டும். இங்குள்ள பெற்றோர் முகத்தில் சாதித்துக் காட்டி உள்ள தன்னம்பிக்கையைத் தெரிகிறது. இதுபோன்று சிரமப்படும் மற்ற மக்களையும் நாம் ஒரு குழுவாக இருந்து ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.

இதேபோல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக ளின் ஏழைப் பெற்றோர் களுக்கு நீங்கள் உதவ வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்

தொடர்ந்து கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : எங்கள் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் மற்றும் கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஆட்டிசம் குறித்தும், அதற்கான பயிற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்த 2 முதல் 3 வயதிற்குள் முறையான பயிற்சி பெற்றால் அந்த குழந்தை வழக்கமான பள்ளிக்கு சென்று படிக்கும் அளவுக்கு தயாராகும். எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா, விளையாட்டு, பேச்சு, கண்னி ஆகியவை குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கௌமார மடாலய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 1429

    0

    0