பிகினி உடையில் வரிந்து கட்டும் தனுஷ் பட ஹீரோயின்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Rajesh
3 April 2022, 5:06 pm

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், ‘கிதர்னாத்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் ஆனந்த் எல் ராய் இயக்கிய அத்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல வண்ணங்களில் இருக்கும் பிகினி உடை அணிந்து கடற்கரையில் பல விதமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சூரியன், கடல், மணல் என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!