10 வருடங்களுக்கு பிறகு விஜய் கொடுக்கும் பேட்டி !

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 8:25 pm

தளபதி இறங்கி அடிக்குற நேரம் வந்துடுச்சு, ஆமாம் ப்ரோ கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு அப்புறம் விஜய் ஒரு பேட்டி கொடுக்கிறார் என்றால் சும்மாவா. எத்தனை பெரிய ஹீரோக்கள் அவங்க படங்களுக்கு இறங்கி வந்து பிரமோட் செய்யுறாங்க. ஆனால் நம்பர் 1 அந்தஸ்தில் இருந்தாலும் தன்னுடைய படத்துக்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் அரசியல் பேசி பப்ளிசிட்டியை ஏற்றி தருவார் விஜய். இந்த முறை ஆடியோ லான்ச் இல்லாமல் ஒரு ஜனரஞ்சகமான பேட்டி மூலம் எல்லோருக்கும் பதில் அளிக்கும் பதில் அளிக்க உள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி சாதனை மேல் சாதனை செய்து வருகிறார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,வரும் ஏப்ரல் மாதம் 13- ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது, அதாவது KGF 2-க்கு ஒரு நாள் முன், ரிலீஸ் ஆகவுள்ளது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!