திருப்பதிக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 8:39 pm

ஆந்திரா : திருப்பதிக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதில் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

திருப்பதி வடகிழக்குப் பகுதியில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடூர் மற்றும் நெல்லூர் இடையே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நள்ளிரவு 1.10 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

பூமியின் நிலப்பரப்பு கீழே 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்த புவியல் ஆராய்ச்சி துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

  • Saif Ali Khan attacked by Knife in his house at Mumbai பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!