கவின் – லாஸ்லியா பிரிவுக்கு இந்த பிரபலம் தான் காரணம்? கவிலியா காதல் பற்றி மனம் திறந்த லாஸ்லியா!!!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2022, 2:08 pm
சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். ஆரம்பத்தில் வந்த சீசனெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலம்.
குறிப்பாக சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த இவருக்கு, கவினுடன் ஏற்பட்ட காதல் கண்ணை மறைக்க காதல் கிசுகிசு விவகாரங்களில் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டார்.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிய பின்பு லாஸ்லியா அழுதது, ரசிகர்கள் மத்தியில் தெய்வீக காதல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
இருவரும் நல்ல ஜோடி, Made for each other என்ற பேசப்பட்டு வந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின், இவர்களது காதல் பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தன.
ஆனால் யார் கண் பட்டதோ, சில நாட்கள் கடந்ததும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். லாஸ்லியாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார்.
மேலும் மலையாள ரீமேக் படமான கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் லாஸ்லியாக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லாஸ்லியா, கவின் உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியில் வந்ததும், எங்கள் இருவருக்கும் செட் ஆக வில்லை. இருவரும் அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். தற்போது பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக கவின் இது தொடர்பாக, காதலில் நாம் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போகவேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.