காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி தகராறு…ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்த தொண்டர்கள்: கண்டன ஆர்ப்பாட்டம் சலசலப்பு..!!

Author: Rajesh
4 April 2022, 3:45 pm

திருச்சி: காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி தகராறால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 8 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.50 விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தால் அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் குறுக்கு தெரு பகுதியில் இன்று காலை காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை போட்டு,
அருகில் விறகு அடுப்பு பற்றவைத்து கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு உடனடியாக கியாஸ் விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் சுஜாதா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், வில்ஸ்.முத்துக்குமார், முரளி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் ஜவகர் கோஷ்டியினருக்கும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சரவணன் கோஷ்டியினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட தலைவர் ஜவகர் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என எப்படி தெரிவிக்கலாம் என வழக்கறிஞர் சரவணன் கோஷ்டியினர் ஒருவர் தாக்க முற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். இதன்
காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 1330

    0

    0