ஆரம்பிக்கலாங்களா…இளைஞர்களுடன் இணைந்து வாலிபால் விளையாடிய முதல்வர்: சமத்துவபுர திறப்பு விழாவில் சுவாரஸ்யம்…வைரலாகும் வீடியோ!!
Author: Rajesh5 April 2022, 1:08 pm
விழுப்புரம்: பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க இன்று திறந்து வைத்த போது கலைஞர் விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது . இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் போது, கம்சலா என்ற பெண்மணியை சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி திறக்க செய்தார் ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பூங்கா, விளையாட்டு திடல், ரேசன் கடை ஆகியவற்றை திறந்து வைத்ததுடன், நூலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடங்கள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். விளையாட்டு திடலில் வாலிபால் வீரர்களுடன் சிறிது நேரம் முதல்வர் ஸ்டாலின் வாலிபால் விளையாடினார். இந்த வீடியோ வைரலானது.
மேலும் அவர் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார் . இதனை தொடர்ந்து ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.