கழிவறையில் இறந்து கிடந்த பெண் சிசு… தாயை கைது செய்து போலீசார்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Author: Babu Lakshmanan
5 April 2022, 2:29 pm

திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவமனையில் கழிவறையில் பெண் சிசு உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் தாயை கைது செய்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திபேடு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கழிவறையில் இறந்த நிலையில், கடந்த மூன்றாம் தேதி பெண் சிசு இருப்பதாக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,சோழவரம் போலீசார் இறந்த சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்சிசுவை போட்டு சென்றது யார் என்பது குறித்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அதில், புதுகும்முடிபூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாய்தாபாணு 33 வயது தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என கூறி சென்றபோது, மருத்துவமனைக்கு வந்தவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அவரை சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் கணவரை இழந்தவர் என்பதும்,ஏற்கனவே அவருக்கு ஒரு குழந்தை உள்ளதும் தெரியவந்துள்ளது.

பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் சிசு மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயின் பரிசோதனை முடிவு மருத்துவ அறிக்கைக்கு பின்னரே உரிய உண்மை விவரங்கள் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் தாயே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?