பீஸ்ட் படத்தில் பிரமாண்ட மால் செட் : எப்படி சாத்தியமானது.? மனம் திறந்த ஆர்ட் டைரக்டர் ..!
Author: Rajesh5 April 2022, 8:14 pm
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தான் விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
காதலர் தினத்தன்று இப்படத்திலிருந்து அரபிக் குத்து என்ற முதல் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 250 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. இரண்டாவதாக வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது. மூன்று நிமிடம் இருந்த பீஸ்ட் டிரைலரில் கிட்டத்தட்ட படத்தின் கதையை சொல்லி இருந்தனர். தீவிரவாதிகள் ஒரு வணிக வளாகத்தை ஹைஜாக் செய்ய அதற்குள் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் விஜய் அங்கிருந்த மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதையாக காண்பிக்கப்பட்டது.
இதனிடையே ட்ரெய்லர் வெளியானதிலிருந்து இந்த வணிக வளாகத்தின் செட் ஒர்க் பற்றி பரவலாக பேசப்பட்டது. ஆர்ட் டைரக்டர் இந்த படம் குறித்து பல தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், பிரம்மாண்டமான செட் அதன் பிறகு மால் செட் போட்டுடலாம்னு முடிவு பண்ணி முதற் கட்ட பணிகளை தொடங்கி முதலில் ஒரு ப்ளோர் மட்டும் செட் போடலாம்னு நினைத்தோம், கடைசியில் மொத்த மாலும் செட் போட்டு விட்டோம். கிட்டத்தட்ட 60 அடிக்கு மேல செட் போட்டோம். பீச் பக்கத்தில் ஒரு ஓபன் பிளேசில் உண்மையான கட்டுமானப்பணி மேற்கொண்டது போல பிரம்மாண்டமாக செட் போட்டோம் என்றார்.
மூனு மாசத்துல இந்த செட்ட போட்டு முடிச்சோம் என்றார். முறையாக ஒரு பில்டிங் எப்படி கட்டுவோமோ அப்படித்தான் இந்த செட் போடப்பட்டது. இந்த செட்டை பார்த்துவிட்டு விஜய் அப்படியே வாயடைத்து நின்று விட்டாராம். இதுவரையில் இவ்வளவு பெரிய செட் யாருமே போட்டது இல்லை என்று பெருமையாக கூறியதாக ஆர்ட் டைரக்டர் கூறினார்.
அனைத்து ஆர்ட் டைரக்டருக்குமே ஒரு பிரம்மாண்டமான படம் பண்ணவேண்டும் என்ற ஆசை இருக்கும் அந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இதற்காக நெல்சன் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரம்மாண்டம் அவரால் தான் சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார்.