மைனர் வளர்ப்பு மகளை சீரழித்த தந்தை: கணவன், மகன்களுக்கு மகளை இரையாக்கிய கொடூர தாய்!!

Author: Rajesh
5 April 2022, 8:25 pm

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் (வயது 64). இவர் செங்குன்றம் பகுதியில் மோட்டார் வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜமீலா.  இந்த தம்பதிக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

பெண் குழந்தை இல்லாததால் கடந்த 17ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் ஒரு மாத பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுபற்றி தெரிந்தும் ஷெரிபின் மனைவி ஜமீலா கண்டும் காணாமல் இருந்துள்ளார்.

நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் மூலமாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , வளர்ப்பு பெற்றோர் ஷெரிப்- ஜமீலா, மற்றும் அவர்களது மகன்களான இம்தியாஸ், இர்பான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செரீப் ஜமீலா தம்பதியின் மற்றொரு மகன் ஹனிபை போலீசார் தேடி வருகின்றனர்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…