உங்கள் படம் உங்கள் பிரச்சனை : நடிகர் சிம்புவின் கோபத்திற்கு ஆளான பிரபல நடிகர்..!

Author: Rajesh
6 April 2022, 11:28 am

சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார். அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்றே, ஒரு அங்கிகாரத்தைக் கொடுத்தது.

சினிமாவில், மட்டுமல்லாமல் நிஜ காதல் வாழ்விலும் பல இன்னல்களையும், தோல்விகளையும் நடிகர் சிம்பு சந்தித்துள்ளார். பல தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், இறுதியாக நடித்த மாநாடு திரைப்படம் சிம்புவின் சினிமா கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிம்புக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் அல்ட்மேட் நிகழ்ச்சியையும் தற்போது தொகுத்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் நடிகர் சிம்பு பத்துதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்திருக்கும் சிம்புவிற்கு சிவகார்த்திகேயன் மூலம் பிர்ச்சனை எழுந்துள்ளது.

அதாவது தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை தராததால் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிக்கும் போது 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு தற்போது 4 கோடி ரூபாய் தரப்படவில்லை என்று சிவகார்த்திகேயன் சார்பாக கூறப்படுகிறது. அதற்கு ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனால் படத்தில் ஏகப்பட்ட நஷ்டம் என்று பதில் மனு போட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு பின்னர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியால் 15 கோடி ரூபாய் சம்பளம் பேசபட்டதாகவும், இந்தப் படத்தால் தனக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று ஞானவேல்ராஜா கூறி வருகிறார்.

இதனால் தான் சிம்பு சிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் கொடுத்த மனுவில் ஞானவேல்ராஜா தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு தடை கோர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

நடிகர் சிம்பு பத்துதலை திரைப்படத்தையும் பெரிதும் நம்பி இருக்கிறார். ஆனால் அவரின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக சிவகார்த்திகேயன் இப்படி ஒரு வழக்குத் தொடர்ந்திருப்பது அவருக்கு ஆத்திரத்தைக் கிளப்பி உள்ளதாம்.
இதனால் உங்களுக்குள் பிரச்சனை என்றால் அதை உங்கள் படத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக மற்றவர்களின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிம்பு, சிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். சிம்பு தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் சிவகார்த்திகேயனை பற்றிதான் புலம்பி வருகிறாராம்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!