வெட்ட வெளியில் பிறந்த நாள் கொண்டாடி ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ..!

Author: Rajesh
6 April 2022, 11:57 am

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம், இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட் அடித்துள்ளது.

தற்போது தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போது இந்தி படங்களிலும் தடம் பதிக்கத் தொடங்கி விட்டார். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள அனிமல் படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். விஜய்யின் தளபதி66ல் ராஷ்மிகாவை நடிக்க நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று அவர் தனது பிறந்த நாள் விழாவினை கொண்டாடினார். இந்த நிலையில் ஏர்போர்ட் வந்த போது, அங்கு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மெழுகு வர்த்தி ஊதி, தனது பிறந்தநாளில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2722

    8

    5