முன்னாள் கணவரை மறக்க முடியாத சமந்தா.. விவாகரத்துக்கு பின்னர் வெளியிட்ட பதிவு வைரல்..!

Author: Rajesh
6 April 2022, 2:13 pm

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் படுகவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார். இது பெண்கள் உடை அணிவது தொடர்பான ஒரு விவாத்தையே உருவாக்கியது. அந்த அளவுக்கு அந்த உடையில் கவர்ச்சி வாரி வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். நடிகை சமந்தா, பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது போட்டோக்களையும், வீடியோக்களையும் அதில் பதிவிட்டு வருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மஜிலி திரைப்படம் குறித்த போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நிஜ காதலர்களான இவர்களின் கெமிஸ்ட்ரி அந்தப் படத்தில் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. தற்போது இப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
இதை நினைவு கூறும் வகையில் சமந்தா அந்த படம் தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார்.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 1447

    0

    0