அழகோ அழகு : 80s மற்றும் 90s நடிகைகளை ஒன்று சேர்த்த திருமண நிகழ்ச்சி : வைரலாகும் புகைப்படங்கள்..!
Author: Rajesh7 April 2022, 10:56 am
80களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் தொடர்ந்து ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் ராஜ்குமார் சேதுபதியை 1988இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சினேகா என்ற மகளும், நாகார்ஜுனா என்ற மகனும் உள்ளனர். இதில் சினேகா, லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில், சட்டத்தில் முதுகலை முடித்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று பல இயக்குனர்கள் இவரை அணுகிய போதிலும், இந்தியாவிலேயே பிரபல வழக்கறிஞராக வர வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறி சினேகா பட வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.
சினேகாவும், தொழிலதிபர் அன்மோல் சர்மாவும் லண்டனில் சந்தித்தபோது ஒருவரையொருவர் காதலித்தனர். பிறகு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் வட இந்திய முறைப்படி பிப்ரவரி 6 ஆம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, தென்னிந்திய முறைப்படி மூன்று நாட்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் ராதிகா சரத்குமார், சரத்குமார், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்வு 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளை ஒன்று சேர்த்த நிகழ்வாக பார்க்கப்படவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகைகள் ஒன்று சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அன்மோல் சர்மா, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசிர்வாதத்துடன் சினேகாவின் கழுத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி தாலி கட்டினார். சினேகா-அன்மோல் திருமண புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுமணத் தம்பதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.