கேலி கிண்டல் கூடாது : ரசிகர்களை எச்சரிக்கை செய்து அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய்..!

Author: Rajesh
7 April 2022, 11:43 am

நடிகர் விஜய் அவரது ரசிகர்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். அரசியலில் இருந்து மட்டும் விலகியிருந்த அந்த இயக்கம், கடந்தாண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.

பிரச்சாரத்திற்கு களத்திற்கு நேரடியாக விஜய் வராத நிலையிலும், அவரது புகைப்படம், விஜய் மக்கள் இயக்கம் கொடி ஆகியவற்றை பயன்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் உத்தரவு குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாரையும் எக்காலத்திலும் இழிவுப்படுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனை செய்யக்கூடாது. பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, திருவான்மியூர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யும், முதல்வர் மு.க ஸ்டாலினும் சந்தித்துக்கொண்டர். இருவரும் பரஸ்பரமாக கை கொடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!