தனுஷ் என்னை காதலித்தார் – கொளுத்திப்போட்ட இளம் சிங்கிள் நடிகை…
Author: Babu Lakshmanan7 April 2022, 5:50 pm
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர்.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தையான ரஜினியும் ஆடிப்போய் விட்டார். இதையடுத்து, தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மகளின் வாழ்க்கையை நினைத்து ரஜினி மிகவும் நொந்து போனதாகக் கூறப்படுகிறது.
தனுஷ்-ஐஸ்வர்யாவின் உறவு முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், உண்மையான காரணம் என்ன..? என்பது இதுவரையில் புலப்படவில்லை.
தற்போது வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி, வடசென்னை-2 படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். இந்த நிலையில், வடசென்னை படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், வடசென்னையில் நடித்தது குறித்தும், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் குறித்தும் பேசிய இருந்தார்.
அவர் கூறியதாவது :- வெற்றிமாறனின் வழிகாட்டுதலினால்தான் வடசென்னை படத்தில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. வடசென்னை படத்தில் காதல் காட்சிகளில் என்னை வெற்றிமாறன் மிகவும் தத்ரூபமாக நடிக்கவைத்தார்.
என் நடிப்பை பார்த்து தனுஷிற்கு காதல் வந்துவிட்டது. தனுஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் என் நடிப்பை பார்த்து அசந்துபோனது மிகப்பெரிய விஷயம். வடசென்னையில் எனக்கு கிடைத்த பெயர் நினைத்து பார்க்காதது என்று கூறி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பேசி இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.