இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோவில்களில் மறைக்கப்படும் மருது சகோதரர்களின் பெயர்கள் : தமிழக அரசுக்கு மருது சேனை கட்சி எச்சரிக்கை
Author: Babu Lakshmanan7 April 2022, 7:33 pm
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மருது சகோதரர்களின் பெயர்கள் மறைக்கப்படுவதற்கு மருது சேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மருது சேனை கட்சியை சேர்ந்த ஆதி நாராயணன், மீனாட்சி அம்மன் கோவிலில் மருது சகோதரர்கள் அளித்த உதவிகள் மானியங்கள் நன்மைகள் என அனைத்தும் குறைக்கப்படுவதாக கூறி, அது சார்ந்த அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலர்களிடமும் மனு அளித்திருந்தார் தொடர்ந்து பத்திரிகையாளரிடம் கூறும்போது :- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமன்றி சிவகங்கை சமஸ்தானத்திலும் எண்பத்தி ஒரு கோயிலுக்கும் வழங்கிய நன்மைகளும் மானியங்களும் மறைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருகல்யாண மண்டபம் அருகில் அகற்றிய மருதுபாண்டியர் சிலையில் இருந்த பெயரை மீண்டும் அமைக்கக் கோரியும், கோவிலுக்கு தானமாக கொடுத்த 1008 திருவாச்சி விளக்குகளில் மருது சகோதரர்களின் பெயர்களை அகற்றியதை கண்டிக்கத்தக்கது.
அரசர்கள் கட்டிய சேர்வைக்காரர் மண்டபம் பெயரையும், கட்டளை உரிமைகளையும் மறுக்கப்பட்டதை கண்டித்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தொடர்ந்து மருது இருவர்களின் பெயரை மறைப்பது என்பதே அதிகாரிகளின் அலட்சியப் போக்கு எங்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் இறங்குவோம், எனக் கூறினார்.