நானும் நடிகன்தான்… திரைத்துறைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Author: Babu Lakshmanan
9 April 2022, 11:03 am

சென்னை : திரைத்துறைக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நந்தனத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கொரோனாவினால் பல துறையினரும் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறையும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் திரைத்துறை மீண்டு முன்னேறி வருகிறது. திமுகவையும், திரைத்துறையையும் பிரிக்க முடியாது. திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழகம். நானும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால், ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன்.

திரையுலகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கு சம்பந்தமான திரைப்படங்களை எடுக்க வேண்டும்

மது ஒழிப்பு, புகைப்பிடித்தல் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் திரைப்படங்களில் இடம்பெறுகிறது. போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் இடம்பெற வேண்டும்.
மனிதனுக்கு கல்வி, நிதி வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், மன வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி வழங்கும் துறையாக திரைத்துறை உள்ளது.

திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், திரைத்துறையில் திறமையானவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், எனக் கூறினார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?