நடிகைகளிடம் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி : பயல்வான் ரங்கநாதன் மீது உச்சகட்ட கோபத்திற்குச் சென்ற பிரபல நடிகர்..!

Author: Rajesh
9 April 2022, 5:13 pm

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் நிறைய படங்களில் துணை நடிகராக தலைக் காட்டியுள்ளார். தற்போது சர்ச்சைக்குறிய வகையில் பேட்டிகளை அளித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இதனிடையே, கே.ஜி.எஃப் 2 பட பிரஸ் மீட்டில் கலந்துக்கொண்டு கேட்ட கேள்வி மேடையில் அமர்ந்து இருப்பவர்களை முகம் சுலிக்கவும், கோபமடையவும் செய்துள்ளது.
அதன்படி பிரஸ்மீட்டிங்கில் கேஜிஎப் படத்தின் படக்குழுவினர் மேடையில் அமர்ந்தனர். அப்போது பயில்வான் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ஈஸ்வரி ராவ்விடம் நீங்கள் இருவரும் உங்களுடைய ஜாதியை தூக்கி பிடிக்கிறீர்களா? ஏன் பொது வெளியில் நடிக்க வந்த பின்னரும் உங்கள் ஜாதி அடையாளத்தை கைவிடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

இது மேடையில் அமர்ந்திருந்த நடிகைகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேட்ட மற்ற பிரபலங்கள் வேறு கேள்வியினை கேளுங்கள் எனக்கூறி பேச்சினை மாற்றினர். பயில்வானின் இந்த கேள்வியால் சிறிது நேரம் அங்கே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பயில்வான் ரங்கநாதன் தேவையில்லாத பேட்டிகள் மூலமும், இவ்வாறான கேள்விகள் மூலமும் தன்னை பொது வெளியில் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இவருடைய இவ்வாறான பேச்சுகள் தேவையற்றது மற்றும் அர்த்தமற்றது என அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர் அடங்கிய பாடில்லை.

தமிழகத்தில் நடந்த சமூகநீதி போராட்டங்களாளும், அரசியல் செயல்பட்டுகளாளும் பெயருக்கு பின்னர் ஜாதி பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் இந்த வழக்கம் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு தான் வருகிறது. இதைக்கூட புரிந்துக் கொள்ளாத பயில்வானை பிரஸ்மீட்டில் செய்தியாளராக அமர வைத்தது யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu