கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து, தற்போது OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது.
கமல் ஹாசனுக்கு பதில் நடிகர் சிம்பு தான், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் இன்று மாலை பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பைனல் போட்டிக்கு மொத்தம் 4 போட்டியாளர்கள் தேர்வாகியிருந்தனர்.
ரம்யா, நிரூப், பாலாஜி மற்றும் தாமரை. இவர்கள் நால்வர் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் பாலாஜி. மேலும், நிரூப் இரண்டாம் இடத்தையும், ரம்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மற்றும் தாமரை நான்காம் இடந்த்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.