இது உலகத் தரத்திலான திரைப்படம் : KGF-2 படத்தினை புகழ்ந்த முக்கிய பிரபலம்..!
Author: Rajesh10 April 2022, 6:37 pm
யாஷின் கேஜிஎப் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் பல திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்சார் போர்டு உறுப்பினரான உமர் சந்த் என்பவர் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
கேஜிஎப் 2 – இந்திய திரைப்படம் மட்டுமல்ல இது உலகத் தரத்திலான திரைப்படம். இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய நடிப்பு திறமையை அருமையாக வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கும் நிலையில், இப்படத்தின் பின்னணி இசை பிரம்மாண்டமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கே ஜி எஃப் 2 தொடங்கியதிலிருந்து முடியும் வரை சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த காட்சிகள் உள்ளது எனவும் உமர் சந்த் தெரிவித்துள்ளார். நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வேற லெவலில் நடித்துள்ளார் என்றும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் புல்லரிக்கும் விதமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் மிக அருமையாக இப்படத்தை எடுத்துள்ளார், என்றும் உமர் சந்த் தெரிவித்துள்ளார்.