காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : போலீசாரிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 1:08 pm

திண்டுக்கல் : ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு போலீசார் விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற கணவர் ஆபத்தான நிலைமையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டிகோ ரெயான். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெப்ரின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் இந்த தம்பதியினர் திண்டுக்கல் ஒய்எம்ஆர் பட்டி பகுதி நடுத்தெருவில் உள்ள மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.

ஸ்டிகோ ரெயானுடன் அவரது தாயாரும் இருந்து வந்துள்ளார். தற்பொழுது கோயம்புத்தூரில் வேலைக்கு சென்று வந்த ஸ்டிகோ ரெயான் அவரது காதல் மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.

போலீசார் ஸ்டிகோ ரெயானை பிடிக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஸ்டிகோ ரெயான் தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் ஸ்டிகோ ரெயான் பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டிகோ ரெயான் வீட்டிலிருந்து ஜெப்ரின் உடலைக் கைப்பற்றிய நகர் வடக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டிகோ ரெயான் போலீசார் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு போலீசார் விசாரிக்க வருவதைக் கண்ட கணவன் தப்பிக்க முயற்சித்து தலை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமானது திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1302

    0

    0