மந்தமானதா பீஸ்ட் பட டிக்கெட் விற்பனை.? ஓ..இதுக்குத் தான் இத்தனை சலுகைகளா..?

Author: Rajesh
12 April 2022, 6:37 pm

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார்.

இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ‘அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ‘விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், பீஸ்ட் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாகவே சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பீஸ்ட் படத்தின் டிக்கெட்களை விற்பனை செய்வதற்காகத்தான் பல்வேறு சலுகைகளை நிறுவனங்கள் அள்ளி வீசுவதாகவும் கூறப்படுறது. மேலும், அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி கேஜிஎப் படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. விற்கபடாத பீஸ்ட் பட டிக்கெட்டுகளால் நஷ்டம் வருமோ என அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளதாகவே தெரிகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…