நேரம் வந்தாச்சு… அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும்… கரூர் பாஜக தலைவர் செந்தில்நாதன் நம்பிக்கை..!!
Author: Babu Lakshmanan12 April 2022, 7:10 pm
கரூர் : வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும் என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், பாஜக கரூர் மேற்கு ஒன்றியத்தலைவர் நல்லசிவம், கரூர் மாவட்ட பாஜக மருத்துவரணி தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திக் ஆகியோர் தலைமையில், அதிமுக திமுக கட்சிகளை சார்ந்த 400க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் பாஜக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கோலகலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், கோபிநாத், மாவட்ட துணை தலைவர்கள் கரூர் செல்வம், குளித்தலை ராஜாளி செல்வம், மாவட்ட செயலாளர் டைம்ஸ் சக்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் அக்னீஸ்வரா செல்வம், பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாரத் மாதா கீ ஜே என்று கட்சியினர் முழக்க மிட்ட போது, மைக்கை வாங்கி பேசிய பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன், “நாம் நமது பாரத தாயினை வணங்குகின்றோம். ஆகவே, மொழி எதுவாகினாலும், நமது பாரத மண்ணினை வாழ்த்துவோம், வணங்குவோம்.
ஆகவே வணங்க வேண்டிய மொழி வேறு ஆக இருந்தாலும், நாம் நமது மொழியிலேயே கூறலாம். பாரத மாதா வாழ்க,” என்று அவர் கூற அனைத்து பாஜக பிரமுகர்களும் வாழ்க கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், “வரக்கூடிய 2024 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், இந்திய அளவில் தமிழகம் பாஜகவில் தனிப்பங்கு வகிக்கும். ஆகவே அதைத்தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் பாஜக அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும். அதற்கான நேரம் வந்து விட்டது,” என்றார்.