ஒரே இரவில் சாய்பாபா கோவில் மற்றும் இரு கிறிஸ்துவ ஆலயங்களில் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து மர்நபர்களுக்கு வலை!!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2022, 7:51 pm
சென்னை : ஒரே இரவில் அடுத்தடுத்து சாய் பாபா கோவில் மற்றும் இரண்டு கிறஸ்துவ ஆலயங்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்தம் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை திருவிக நகர் எஸ்ஆர்பி கோவில் வடக்கு தெருவில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா கோவில். மேலும் அதே தெருவில் ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் மற்றும் ஆண்டாள் அவின்யூ பகுதியில் மாதா சிற்றாலயம் அமைந்துள்ளது.
இந்த மூன்று இடங்களிலும் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.