20 நாட்கள் நடிக்க இத்தனை கோடிகளா..?வாயை பிளக்க வைத்த நயன்தாரா…!!!

Author: Babu Lakshmanan
14 April 2022, 12:04 pm

திரைத்துறையில் யாரும் அவ்வளவு எளிதில் உச்சத்தை அடைந்து விட முடியாது. ஒருவர் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார் என்றால், நிச்சயம் அவரது கடின உழைப்பே காரணமாக இருக்கம். இதற்கு சிறந்த உதாரணமே நடிகை நயன்தாராதான்.

ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளராக இருந்து பின்னர் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அவர், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், சக நடிகைகள் பொறாமை படும் அளவுக்கு தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்து, முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா, தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அதோடு நயன்தாரா பிசினஸ்வுமனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நயன் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும், மலையாளம், தெலுங்கிலும் பிஸியாக இருக்கும் நயன்தாரா, பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நயன் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை 3 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்.

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க வெறும் 20 நாட்களே கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்காக, தன்னுடைய சம்பளத்தை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பிற நடிகைகளை ஆச்சர்யத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 1652

    25

    8