அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு : பாஜக – விசிகவினரிடையே மோதலால் பதற்றம்… போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
14 April 2022, 4:19 pm

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க கூடாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அவரது சிலைக்கும், புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர், தாங்கள் நிறுவிய சிலை, எனவே பாஜகவினர் மாலை அணிவிக்க கூடாது என்றும், எங்கள் கோட்பாடு தவறு என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலை உள்ளதால் தாங்கள் மாலை அணிவித்தே தீருவோம் என கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அந்த பகுதியில் குவிந்த காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவினரை கலைந்து செல்ல கூறினர். இருந்தபோதிலும் அந்த இடத்திலேயே தங்கள் மாலை அணிவிப்பதாக கோரி அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து வந்து படத்திற்கு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பிய கலைந்து சென்றனர்.

இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழலால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 1705

    0

    0